Tuesday, May 10, 2005

Coimbatore

ஓர் இரவு!
வழக்கமா ராத்திரி ஒரு 8- 9 மணிக்கெல்லாம் (வீட்டுக்கு போயிட்டா) ஒரு கையில ரிமோட்டும், ஒரு கையில செல்போனுமா டி.வி முன்னாடி செட்டிலாயிருப்பனுங்க.. நேத்தும் அப்படித்தான் வழக்கம் போல சாப்பிட்டு வந்து ரிமோட்ட எடுத்தேன், கரண்ட் கட்.. சரி என்ன செய்யறதுன்னு, ஒரு பாயும், எங்கய்யன் 75 ரூபா குடுத்து புதுசா வாங்கி வச்சிருக்கிற FM ரேடியோவயும் எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு போயிட்டனுங்க..மொட்ட மாடியில மல்லாக்க படுத்துகிட்டு, ரெண்டு நாளா அடிச்ச கோடை மழையோட சிலுசிலுப்ப ரசிச்சுகிட்டே, தென்னங்கீத்துக்கு நடுவால மின்னுர நட்சத்திரங்களயும், பொளர்னமிய நெருங்கிட்டு இருக்கிற நிலாவயும் பார்த்துகிட்டு.. அப்படியே ரேடியோவ போட்டா, அதுல 'ராஜபார்வை'யில இருந்து 'அழகே அழகு' பாட்டு.. அடபோங்கப்பா 'சிப்லா' இன்னைக்கு 10 ரூபா ஏறியிருந்தா என்ன, இறங்கியிருந்தா என்ன.... என்ன பாட்டு.. என்ன இசை..என்ன காத்து.. சொர்கம் சொர்கம்ங்கிறாங்களே.. அது இப்படிதானுங்க இருக்கும்.